search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய திட்டங்கள்"

    • முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு
    • புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி அன்று தருமபுரிக்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11-ந் தேதி காலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    பாடு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

    ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

    குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதியன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய திட்டங்கள் அறிவிப்புக்கு முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
    • மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    தொண்டி

    கடந்த வாரம் ராமநாத புரத்தில் நடந்த மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப்போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 33 படகு களின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொண்டி பகுதி மீனவர்கள் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையின் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் டாக்டர் சீனிராஜன், ராமேசுவம் வில்லாயுதம் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் பால் மாஸ் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார் ராமநாதபுரம் மலைச்சாமி, உப்பூர் துரைபாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோர பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்ல பயிற்சி அளிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுமையான ஹெர்போலிவ் முறை மூலமான பயிர் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்கு மேலாண்மை, கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி ஆகிய 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    வேளாண் ஆளிள்ளா விமானம் (ட்ரோன் புராஐக்ட்) மூலம் வன விலங்கிடம் இருந்து பயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகளை புதுமையான ஹெர்போலிவ் என்னும் இயற்கை மருந்தினை ஆளிள்ளா விமானம் மூலம் தெளிப்பது மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை சார்ந்து இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் புதிய முயற்சியாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டிடும் வகையில் புதிய தொழில் முனைவோர்களாக மாறி வருகின்றனர். உழவர் உற்பத்தியாளர் குழுவில் விவசாயிகள் இணைந்து சிறந்த முறையில் மதிப்பு கூட்டப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய 3 திட்டங்களுமே விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி அளிக்கலாம்.

    இங்கு வருகை புரிந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுசேவை செய்யும் பழகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோர்களாக உருவாகிட வேண்டும்.

    இந்த புதிய முயற்சியை செயல்படுத்தவுள்ள விவசாயிகளுக்கும், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தாளவாடி வட்டம், கொங்கள்ளி கிராமத்தில் செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீ வனத்தை பயிரிட்டுள்ள விவசாயி மாதேஷ் என்பவரிடம் பசுந்தீவனம் குறித்து தொலைபேசி வீடியோ அழைப்பு மூலமாக கலந்துரையாடினார்.

    புதுமையான ஹெர்போலிவ் முறையில் தெளிக்கப்படும் வளர்ச்சி ஊக்கியின் வாசத்தின் காரணமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டு எருமைகள். மயில்கள், முயல், எலிகள், பறவைகள், அணில், குரங்குகள் மற்றும் கிளிகள் மூலம் விலங்குகளை அழிக்காமல் விளை பயிர்கள் சேதமடைவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

    பயிர்கள் நல்ல வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. பூச்சிகள் வராமல் தடுக்கிறது. பூஞ்சான்நோய்களை கட்டுப்படுத்தி நிலத்தின் சத்துக்களை அதிகப்படு த்துகிறது. மூலிகைகளை கொண்டு செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவனமானது வறட்சிகாலத்தில் கால்நடை விவசாயிகளுக்கு ஏற்றவகையில் இருக்கும்.

    இதனையடுத்து 4 விவசாயிகளுக்கு செறிவூட்ட ப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன தொகுப்பு களையும், சிறப்பாக களப்பணியாற்றிய 15 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் நிலைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர்.அழகேசன், திட்ட தலைவர்; சுதர்சன், கோபி ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம், தலைவர் திருவேங்கடசாமி, செயலாளர் வெங்கடேஷ், சரவணன் உள்பட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
    • சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் பின்புறம் ஜின்னா சாலை முதல் இக்பால் சாலை வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலி, சோலார் மின் விளக்குகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்க இருக்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாமராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, செல்வராஜ், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.பாண்டியன், ஆலங்காயம் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, அம்மா பேரவை சதீஷ்குமார், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் எம்.ஜி என்கின்ற ஜெய்சங்கர், ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற உறுப்பினர் சையத் சபியுல்லா, ரபீக் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
    காரைக்கால்:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், மகளிர் தின விழா காரைக்கால் வணிகர் சங்க மையத்தில் கொண்டாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, சத்தான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயமும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான உதவிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு விரைவில் உருவாக்கி செயல்படுத்தும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற விடா முயற்சி அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
    மீன்வளத்துறை சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்த ரூ.160 கோடி நிதி மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லியில் மத்திய மீன்வள அமைச்சக செயலாளர், மீன்வள அமைச்சக இணை செயலாளர், மீன்வள ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது புதுவை அரசின் மீனவர் நலம் மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய மீன்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    புதுவையில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம், காரைக்கால் மற்றும் ஏனாம் மீன்பிடிதுறைமுகங்களை நவீனப்படுத்தி விஸ்தரிக்கவும், புதுவை பகுதியில் நல்லவாடு, பெரியகாலாப்பட்டு பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கவும் மொத்தம் ரூ.140 கோடி நிதி வழங்க மத்திய மீன்வள அமைச்கம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் நிதிஒதுக்கீடு புதுவை அரசுக்கு கிடைக்கும்.

    மேலும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் புதிய மீன் ஏலக்கூடம், மீன்அருங்காட்சியகம், நவீன மொத்த மற்றும் சில்லரை மீன் வணிக வளாகம் ஆகியவையும், மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண உதவியை ரூ. 4 ஆயிரத்து 300 ஆக உயர்த்தவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு மானியம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடி வழங்கவும், நன்னீர் மீன் வளர்ப்புக்கு மானியமாக ரூ 1 லட்சமும், உவர்ப்பு நீர் மீன்வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.26 லட்சமும், மீன்பிடி படகுகள் மற்றும் என்ஜின்களை புதுப்பித்து உதவி வழங்க ரூ.60 லட்சமும் மத்தியஅரசு நிதி வழங்கி உள்ளது.

    புதுவை அரசு மீன்வளத்துதுறை சார்பில் புதிய திட்டங்களுக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்பித்து விடுத்த கோரிக்கைகளை அடுத்து மொத்தம் ரூ.159 கோடியே 67 லட்சம் அளவிலான நிதி ஒதுக்கீடு மத்திய மீன்வள அமைச்சகத்திடமிருந்து கிடைத்துள்ளது.

    இந்த தகவலை புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் கூறினார்.
    மண்டியா :

    மண்டியாவில் நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக குறைந்தது ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் ரூ.162 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மண்டியா மாவட்ட மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

    சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறைக்காவது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

    கே.ஆர்.எஸ். அணை அருகே அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அறிவிக்கப்பட்டதுதான். அதைத்தான் குமாரசாமியும் அறிவித்துள்ளார். ககனசுக்கி நீரீவீழ்ச்சி சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.

    மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க, குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது 2 மட்டும்தான் மண்டியா மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அம்பரீஷ் கூறினார். 
    ×